ரைஸ்-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்திற்கு அமைவாக நாடு வெகுவாக அபிவிருத்தி கண்டுவரும் நிலையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸவின் ஆலோசனைக்கமைய புறநெகும திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 4 அபிவிருத்தி திட்டங்கள் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
கிண்ணியாவினை அழகுபடுத்தும் நகரபிதாவின் திட்டத்திற்கு அமைவாக கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி திட்டங்கள் பல கிண்ணியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுவருகின்றது.
அதேபோல் இன்னும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் நகரபிதா தெரிவித்தார்.
கிண்ணியா நகரசபை புறநெகும திட்டத்தினூடாக 4 அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.
கிண்ணியா நகரசபை புறநெகும திட்டத்தினூடாக 4 அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.
கட்டையாறு பொழுதுபோக்கு பூங்கா, மரக்கறி சந்தை, ரஹ்மானியா சிறுவர் பூங்கா, கட்டையாறு மாலிந்துறை கடற்கரை வீதி ஆகியன நகரபிதா ஹில்மியின் கனவுகளின் சரித்திரம் நிஜமாகும் தருணம் இன்று பெயர் சொல்ல காத்திருக்கின்றது. இத்திறப்பு விழா நிகழ்வு இன்று கிழக்கு மாகாண ஆளுநரினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
எமது மண்ணுக்கான அபிவிருத்தித் திட்டங்களில் மற்றுமொரு இமாலயமாக சரித்திரம் காணாத கனவு நினைவாகும் மற்றுமொரு சந்தர்ப்பம் எம்மை பூரிப்படைய வைக்கிறது. இந்நிகழ்வுக்கு பிரதம, கௌரவ, சிறப்பு விருந்தினர்கள் வருகை தந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம, கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் கலந்து சிறப்பித்து உரை நிகழ்த்தவுள்ளனர்.
அத்தோடு நகரசபையின் உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும், பிரமுகர்களும் கலந்துகொள்ளும் மாபெரும் திறப்பு விழா இன்று சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு மிக விமர்சையாக இடம்பெறவுள்ளன.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment