வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சடலம் கண்டெடுப்பு -படங்கள்



த.நவோஜ்-

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தியாவட்டுவான் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு
இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.

ஓட்டமாவடி ஆற்றில் ஓட்டமாவடி பாலத்தில் இருந்து நூறு மீற்றர் தூரத்தில்
தியாவட்டுவான் மையவாடிக்குப் பின்னால் உள்ள ஆற்றில் இருந்து இந்த இளைஞனின்
சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர் 25 வயதிற்கும் 30 வயதிற்கும்
இடைப்பட்டவராக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், இவர் தொடர்பான தகவல்களை
பெற்றுக் கொள்வதற்கு பொதுக்களின் உதவியை நாடி நிற்பதாகவும் பொலிஸார்
தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு தோணியில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் கண்டு
தெரியப்படுத்திய தகவலையடுத்தே பொது மக்களின் உதவியுடன் சடலம்
எடுக்கப்பட்டதாகவும், இச்சடலம் மருத்துவ பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார
வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார்
தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :