அமைச்சர் பஷீரின் நூலில் வரும் பணம் பலஸ்தீனத்தில் அல்லலுறும் சிறுகுழந்தைகளுக்கு பால்மா













அஷரப் ஏ சமத்-

ற்பத்தி ஊக்குவிப்பு திறன் அபிவிருத்தி அமைச்சர் பசீர்சேகுதாவுதின் சேர்விலாச் சொல் எனும் 1991-2011ஆம் ஆண்டு வரை பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் அடங்கிய நூல் இன்று பம்பலப்பிட்டிய சரஸ்வதி மண்டபத்தில் வெகுவிமர்சையாக என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் கலந்து கொண்டார். 

நூலின் முதற்பிரதியை புரவலர் ஹாசீர் உமர் கலந்து கொண்டு  பிரதியை பெற்றுக்கொண்டார். பேராசிரியர் எம்.எஸ். அனஸ், எம்.ரீ.ஹசன் அலி, ரவிசுந்;தரலிங்கம், இந்தியா பேராசிரியர் முத்துசேகன் ஆகியோரும் உரையாற்றினார்கள்.

அரசியல்வாதிகள், பத்திரிகைகளின் ஆசிரியர்கள், இராசம்பந்தன், மனோகனேஸ், அசாத்சாலி, ஏ.எச்.எம் பௌசி, ஏ.எச்.எம் அஸ்வர், மாகாணஅமைச்சர் நசீர்அஹமட், எச்.எம். ஹரீஸ் உற்பட பல்வேறு அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்களுக்கும் நூல்கள் வழங்கப்பட்டன. இந் நூலிற்காக பெறப்பட்ட அன்பளிப்புக்கள் பலஸ்தீனத்தில் அல்லலுறும் சிறுகுழந்தைகளுக்கு பால்மா பெற்றுக்கொள்ள அன்பளிப்புக்கு வழங்கப்படும். 

சிரேஸ்ட அறிவிப்பாளர் விஸ்வநாதன், சக்தி தயாரிப்பாளர் சியா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :