அளுத்கம வன்முறைக்குப் பிறகு, முஸ்லிம்களுக்கு எதிராக மீண்டும் ஒரு இனவன்முறையை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், இதற்கான கூட்டமொன்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றதாகவும் குறுஞ்செய்தி வதந்தி பரப்பிய விவகாரம் தொடர்பில் நான்கு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குவைட் நாட்டில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மொஹம்மட் ரிஸ்வான் எனும் நபரே நீர்கொழும்பைச் சேர்ந்த ஒருவருக்கு இச்செய்தியை முதன் முதலில் அனுப்பியுள்ளமை புலன் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமைக் காரியாலயம் அறிவித்துள்ளது.
மொஹம்மட் சிறாஸ் (பன்னல),மொஹம்மட் ரிழா (கொழும்பு-14),மொஹம்மட் நஸ்மி (கொழும்பு-04),மொஹம்மட் கியாஸ் (தெஹிவளை) ஆகிய நால்வரே ஒருவருக்கொருவர் மேற்படி குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இனவாதத்தை தூண்டும் குறுஞ்செய்திகளை எவருக்கும் பகிரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment