வெளிவரும் இரகசியம் 880 இஸ்ரேலியர்கள் மரணம், 1861 பேர் காயம்

டந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த ஹமாஸ் – இஸ்ரேல் யுத்தத்தில் இஸ்ரேலியத் தரப்பில் 880 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒரு புதுத்தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை இஸ்ரேலின் பிரபல பத்திரிகையான “Haartez” இன் நிருபர்களில் ஒருவராகிய “ஆமூஸ் ஹாரீல்” என்பவர் தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “கடந்த ஆகஸ்ட் 2ம் திகதி கூடிய இஸ்ரேலின் அமைச்சரவைக் கூட்டத்தில் இஸ்ரேல் இதுவரை சந்தித்துள்ள இழப்புக்கள் பற்றிய ஒரு அறிக்கை வழங்கப்பட்டது. இவ்வறிக்கையில் இந்த ஒரு மாத காலப்பகுதியில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய படைவீரர்கள், அதிகாரிகள், தற்கொலை செய்துகொண்டவர்கள், காயப்பட்டவர்கள் போன்ற அனைவரினதும் விபரங்கள் தெரிவிக்கப்பட்டன.

இவ்வறிக்கையில் உள்ள பிரகாரம், இதுவரை 497 வீரர்களும், 113 அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இது தவிர ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் காயத்திற்குள்ளாகியுள்ளனர்.

இது தவிர, 166 படையினர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், இன்னும் 311 படைவீரர்கள் யுத்தத்திற்குச் செல்லாமல் இருக்க தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை குவைதில் இருந்து வெளிவரும் பிரபல் சஞ்சிகையான “அல்முஜ்தமாஹ்” தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
டெச் இஸ்லாம்.சொம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :