சில ஊடகங்கள் அரசாங்கத்திற்கு விரோதமாக செயற்பட்டு வருவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதாக மக்களுக்கு எடுத்தியம்பும் போலிப் பிரச்சாரத்தில் சில ஞாயிறு பத்திரிகைகள் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரங்களின் பின்னணியில் சில வங்குரோத்து அடைந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் மத்திய வங்கியின் புள்ளி விபரங்களையும் திரிபுபடுத்தி வெளியிட முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ஊவா மாகாணம் தொடர்பில் சில அரசியல்வாதிகள் சில ஊடகங்களும் பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
எவ்வாறெனினும், இந்த சவால்களை வெற்றி கொண்டு ஊவா மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை மீளக் கைப்பற்ற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment