2013ம் ஆண்டில் முப்படையினரின் சம்பளங்களுக்காக 73.17 பில்லியன் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளது. இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினரின் சம்பளக் கொடுப்பனவிற்காக இவ்வாறு பணம் செலவிடப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அபிவிருத்தி; மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு பாதுகாப்பு அமைச்சிற்கு பாரியளவில் பணம் ஒதுக்கீடு செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் இவ்வாறு பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் இதுவே யுத்தம் வெற்றிகொள்ள ஏதுவாக அமைந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டைப் படையினர் பலப்படுத்துவதாகவும், படையினரை அரசாங்கம் பலப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment