முஸ்­லிம்­க­ளுக்கு நீதி கிடைக்­காமல் போன­மைக்­கான பாவத்தை செய்­தவர் ஹக்கீம் தான் - லக் ஷ்மன் கிரி­யெல்ல(MP)

முஸ்­லிம்­க­ளுக்கு நீதி நியாயம் கிடைக்­காமல் போன­மைக்­கான பாவத்தை செய்­தவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீமே ஆவார். எனவே, இன்று அது தொடர்பில் முத­லைக்­கண்ணீர் வடிப்­பதால் பல­னில்­லை­யென ஐ.தே.கட்­சியின் கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் லக் ஷ்மன் கிரி­யெல்ல நேற்று சபையில் தெரி­வித்தார்.

18ஆவது திருத்தம் முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆத­ர­வு­ட­னேயே நிறை­வேற்­றப்­பட்­டது என்றும் அவர் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை
விசேட வழக்குத் தொடுநர் எனப்­படும் பத­வி­யொன்றை உரு­வாக்­குதல் தொடர்­பாக ஐ.தே.கட்சி எம்.பி ரவி கரு­ணா­நா­யக முன்­வைத்த தனி­நபர் பிரே­ரணை மீதான விவா­தத்தில் உரை­யாற்றும் போதே லக் ஷ்மன் கிரி­யெல்ல எம்.பி இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் சபையில் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

அளுத்­கமை பேரு­வ­ளையில் இடம்­பெற்ற அசம்­பா­வி­தங்கள் தொடர்பில் முஸ்லிம் மக்­க­ளுக்கு நீதி நியாயம் கிடைக்­க­வில்லை என்றும் எனவே முஸ்­லிம்­க­ளுக்கு நீதியை பெற்றுக் கொடுப்­ப­தற்­காக உயர் நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­யப்­போ­வ­தா­கவும் முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் நீதி அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்­தி­ருந்தார்.
முஸ்­லிம்­க­ளுக்கு நீதி நியாயம் கிடைக்­கா­மைக்­கான முழுப்­பொ­றுப்­பையும் அமைச்சர் ரவூப் ஹக்­கீமே ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.

17ஆவது திருத்­தத்தை ஐ.தே.கட்சி உட்­பட சபையில் 224 உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வுடன் நிறை­வேற்­றப்­பட்­டது. இதன்­மூலம் நீதித்­துறை பொலிஸ் அரச சேவைகள் என அனைத்­திற்கும் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் நீதித்­து­றையில் சுயா­தீனம் காணப்­பட்­டது. ஆனால் இந்த 17ஆவது திருத்­தத்தை இல்­லா­தொ­ழித்து சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை இல்­லாது செய்து 18ஆவது திருத்­தத்­திற்கும் அர­சாங்­கத்­திற்கும் ஆத­ரவு வழங்கி அதனை நிறை­வேற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸூம் அதன் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீமே ஆத­ரவு வழங்­கினார்.

இதனால் இன்று சட்­டமா அதிபர் உயர் நீதி­மன்ற நீதி­ப­திகள் இரா­ணுவத் தள­பதி உட்­பட அரச உயர் பத­வி­க­ளுக்கு ஜனா­தி­ப­தியே நிய­ம­னங்­களை வழங்கும் நிலைமை உரு­வா­னது.
ஆனால் 17ஆவது திருத்தம் நடை­மு­றையில் இருந்த போது இவ்­வா­றான அரச உயர் பத­வி­க­ளுக்கு ஜனா­தி­ப­தி­யினால் பெயர்கள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டாலும் அதனை நிரா­க­ரிக்­கவும் வேறொ­ரு­வரின் பெயரை பரிந்­து­ரைக்­க­வு­மான அதி­காரம் அர­சி­ய­ல­மைப்பு சபைக்கு இருந்­தது. ஆனால் 18ஆவது திருத்தம் நிறை­வேற்­றப்­பட்­ட­தோடு இந்­நிலை மாறி அனைத்தும் ஜனா­தி­ப­தியின் கைகளில் சிக்­கிக்­கொண்­டது.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் முஸ்­லிம்­க­ளுக்கு நீதி நியாயம் கிடைக்­க­வில்லை என அமைச்சர் ஹக்கீம் சொல்­வதால் எந்­தப்­ப­யனும் இல்லை. ஏனென்றால் முஸ்­லிம்­களை இந்த நிலைக்கு தள்­ளி­விட்ட பாவத்தை செய்­தவர் ஹக்­கீமே ஆகும்.

இந்­தப்­பாவம் முஸ்லிம் மக்­களை மட்­டு­மல்ல அனைத்து நாட்டு மக்­க­ளையும் நெருக்­க­டியில் தள்ளி விட்­டுள்­ளது. ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் சர்­வ­தேச விசா­ர­ணையில் சாட்­சி­ய­ம­ளித்தால் விப­ரீ­தங்­களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சரொருவரே அச்சுறுத்துகின்றார்.

அவ்வாறானதோர் நிலையில் சாட்சியாளர்களை பாதுகாப்போம். அதற்காக பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றுவோம் என்ற அரசின் உறுதிமொழிகளை எவ்வாறு நம்ப முடியும் என்றும் லக் ஷ்மன் கிரியெல்ல எம்.பி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :