தென்கிழக்கு பல்கலைக்கழக இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14ம், 18ம் திகதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார்.
கலை, கலாசார பீடம், இஸ்லாமிய அறபு மொழி பீடம், வர்த்தக முகாமைத்துவ பீடங்களின் கல்வி நடவடிக்கைகளே ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதிவாளர் தெரிவித்தார். மேற்படி பீடகங்களைச் சேர்ந்த மூன்றாம் வருட கல்வி நடவடிக்கைகள் 14ம், திகதி வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக, விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் 13ம் திகதி புதன் கிழமை மாலை 04.00 மணிக்கு முன்னர் விடுதிகளுக்கு சமூகமளிக்குமாறும், இரண்டாம் வருட கல்வி நடவடிக்கைகள் 18ம் திகதி திங்கட் கிழமை ஆரம்பிக்கப்பட்வுள்ளதாகவும் , விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு முன்னர் சமூகமளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment