லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் இன்று நமது நாட்டில் ஒரு சர்வ சாதரணமானவிடையமாக விளங்குகின்ற.,
லஞ்சம் வாங்குவது எப்படி மிகவும் மோசமான செயலோ, அதேபோல லஞ்சம் கொடுப்பதும் மிகவும் தவறான செயல்."நீ கொடுத்ததால்தான் நான் வாங்கினேன்" என்கின்ற லஞ்சம் வாங்கும் விற்பன்னரின் அடாத்து கதைகளுக்கு லஞ்சம் கொடுப்பவரால் 100 சதவிகிதம் இதயசுத்தியுடன் முன்னின்று பதில் சொல்ல முடியாது.
லஞ்சம் கொடுப்பது தவறு என்று தெரிந்தும் இன்றுவரை லஞ்சமே கொடுத்ததில்லை என்று இதயசுத்தியுடன் சொல்பவர்கள் எத்தனைபேர்? பேச்சிற்க்கும், சட்டத்திற்கும், நியாயத்திற்கும் தப்பாக தோன்றும் லஞ்சம் கொடுக்கும் விடயம் அன்றாட நடைமுறை வாழ்வில் எத்தனை சதவிகிதம் சாத்தியமாக இருக்கும்?
ஏதாவதொரு சந்தர்ப்பத்திலேனும் லஞ்சம் கொடுத்தவர்கள்தான். லஞ்சம் கொடுப்பதுதவறென்பது எத்தனை சதவிகிதம் உண்மையோ; அதேபோல லஞ்சம் கொடுக்காமல் இன்றுவாழ்க்கையை ஓட்டுவது சிரமமான விடயம் என்பதும் அத்தனை சதவீதம் உண்மை. இல்லை என்று வீரவசனம் பேசுபவர்களுக்கு என்னால் எந்த பதிலும் சொல்லமுடியாது;காரணம் வீரவசனம் வேறு, வாழ்க்கை வேறு.
லஞ்சம் கொடுக்க மாட்டேன் என லஞ்சத்தை எதிர்க்கும் உண்மையான நேர்மையான மனிதர்களுக்கு சமூகம் கொடுக்கும் பெயர் முட்டாள், கஞ்சன், வாழத்தெரியாதவன்.
உதாரணமாக :-ஒரு நிறுத்தற்தடை (No Parking) உள்ள இடத்தில் தவறுதலாகவோ, போலிசை அவ்விடத்தில் காணவில்லை என்பதாலோ வண்டியை நிறுத்தி விடுகின்றோம். திடீரென அங்கு வரும் போலிஸ் "No Parking கில் வண்டியை நிறுத்தியதற்கு குற்றம் எழுதினால்கோட்டுக்கு போய் 500 ரூபாய் தண்டப்பணம் கட்ட வேண்டும், தண்டப்பணம் கட்டுகிறாயா?இல்லை என்னை கவனிக்கிறாயா? " என கேட்குமிடத்தில் நீதிமன்றம் போய் அலைக்கழிந்து500 ருபாய் தண்டப்பணம் கட்டுவதற்கு பதிலாக இவனுக்கு 200 ரூபாயை கொடுத்து விடலாமென்றுதான் தோன்றும்.
நீதிமன்று சென்று கட்டும் தண்டப்பணம் நாட்டுக்கானது, அதாவது எமக்கானது; ஆனால் போலீசிற்கு கொடுக்கும் பணம் போலிஸ் என்னும் தனி மனிதருக்கானது. இது எமது புத்திக்கு தெரிந்தாலும் 4 மணித்தியாலம் + 300 ரூபாயை நாட்டுக்காக இழப்பதைவிட,பொலிசிற்கு 200 ரூபாய் கொடுப்பதால் 4 மணித்தியாலம் + 300 ரூபாய் எமக்குசேமிக்கப்படுகின்றது என்கின்ற யாதார்த்தம்தான் எம்மனதில் அக்கணம் தோன்றும்;
அதனால்த்தான் அவ்விடத்தில் 200 ரூபாயை லஞ்சமாக கொடுத்துவிட்டு தப்பித்துவிடுகின்றோம். இப்படியான சந்தர்ப்பங்களில் லஞ்சம் கொடுப்பது தவறு என்கின்றஉபதேசம் மண்டையில் ஏறவே ஏறாது!!!!! காரணம் உபதேசம் வேறு, வாழ்க்கை வேறு.
அடிப்படையில் லஞ்சம் கொடுப்பதற்கான முக்கிய காரணிகளை நோக்கினால்; நேரமின்மை,அவசரத்தேவை, அலைச்சல், பணம் சேமிப்பு, பயம், தண்டனையில் இருந்து தப்பித்துக்கொள்ளுதல், சோம்பல், பணத்திமிர் என்பன முக்கியமானவை.இப்படியாக அவரவரின் தேவைக்கேற்ப லஞ்சம் கொடுப்பதென்பது எம் அன்றாட வாழ்வில் எம்மோடு பின்னிப் பிணைந்திருக்கும். லஞ்சம் கொடுத்தல் என்னும் நிகழ்வு இல்லாமல், அதாவது லஞ்சம் கொடுக்காமல் வாழ்க்கையை ஓட்டுவதென்பது சாதாரண விடயமல்ல. எம்மால் லஞ்சம் கொடுப்பதை முழுமையாக தவிர்க்க முடியாவிட்டாலும் இயலுமானவரை லஞ்சம் கொடுப்பதை குறைக்க முயற்ச்சிக்கலாம்!!!
முஹம்மட் ஜெலீல்
நிந்தவூர்

0 comments :
Post a Comment