PMGG , UNP தலைவர் சந்திப்பு


PMGG ஊடகப்பிரிவு-

ணில் விக்கிரமசிங்க,  PMGG ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (16.07.2014) கொழும்பில் இடம் பெற்றது.

இச்சந்திப்பு குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது…

“நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்தும் அதனால் சகல மக்களும் எதிர்நோக்கும் இன்னல்கள் நெருக்கடிகள் குறித்தும் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படாமையும் சட்டத்தின் ஆட்சி நிலவாமையுமே இன்றுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்குமான அடிப்படை காரணமாக மாறியுள்ளது. இதனால் சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள், தமிழர்கள் மாத்திரமின்றி சிங்கள மக்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இந்த நிலமைகளை மாற்றி அமிப்பதற்காக, சகல அரசியட்கட்சிகளும் வெகுஜன இயக்கங்களும் சிவில் அமைப்புகளும் ஒன்றிணைந்து செயட்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் ஐக்கிய தேசிய கட்சியும் எவ்வாறு இணைந்து செயற்படமுடியும் என்பது குறித்து தொடர்த்தும் இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்துவதென்றும் இச்சந்திப்பின்போது இணக்கம் காணப்பட்டது.

குறிப்பாக கிழக்கில் மேற்கொள்ளப்படவேண்டிய அரசியற் செயற்பாடுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் எதிவரும் ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஐ.தே.கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கான உடன்பாடும் கொள்கை அளவில் எட்டப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விடயங்கள் எதிவரும் நாட்களில் விரிவாக ஆராயப்படும்.”

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், பொதுச் செயலாளர் நஜாஹ் மொஹமத், வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டதோடு, ஐ.தே.க கட்சி சார்பில் மேல் மாகாண சைப் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானும் கலந்து கொண்டார்.

இச்சந்திப்பினை தொடர்ந்து ஊடகவியலாளர் மாநாடொன்றும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.LM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :