தோப்பூர் செல்வநகர் நாவற்கேணிகாடு முஸ்லிம்களின் காணி விடயமாக விசேட கலந்துரையாடல்



ன்று வியாழக்கிழமை (17) தோப்©ர் செல்வநகர் நாவக்கேணிகாடு பகுதியிலுள்ள 35 முஸ்லிம் குடும்பங்களுக்கு சேருவில பிதேச செயலாளரினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ம் திகதிக்கு முன்னர் தமது உடமைகளுடன் வெளியேறு மாறும் அக்காணி புதைபொருள் ஆய்வு திணைக்கத்திற்கு சொந்தமானதெனவும் கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது பின்னர் கடந்த திங்கட்கிழமை குறித்த பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் பிரதேச செயலாளர் மற்றும் அப்பிரதேச மக்களுக்கிடையிலான கலந்துரையாடலின் போது வீடு கட்டி குடியிருந்து வருபவர்கள் தமது இடங்களிலேயே வசிக்கலாம் என்றும் மிகுதியாகவுள்ள வயல்காணிகள் மற்றும் வெற்றுக் காணிகளை விட்டு அகலுமாறு வேண்டப்பட்டதை

தொடர்ந்து பிரதேசத்திலுள்ள முக்கியமானவர்கள் முதலமைச்சரை சந்திப்பதற்கான ஏற்பாடு கடந்த செவ்வாய் கிழமை முதலமைச்சர் காரியாலயத்தில் மாகாண சபை உறுப்பினர் அன்வரின் வேண்டுகோளுக்கிணங்க சந்திப்பு இடம்பெற்றது அதற்கமைவாக முதலமைச்சரின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை (17) தோப்©ர் செல்வநகர் நாவற்;கேணிகாடு பகுதிக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் முதலமைச்சரின் செயலாளர் மாகாண காணி ஆணையாளர் சேருவில பிரதேச செயலாளர் பிரதேச சபை உறுப்பினர்களான நிஸ்மி பைஸல் காஜி பள்ளிவாயல் நிர்வாகம் ஜம்மியத்துல் உலமா உட்பட பலர் கலந்து கொண்டு குறித்த பகுதியை பார்வையிட்டதோடு நிலைமைகளை நேரில் கண்டறிந்தனர்

பின்னர் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது இதன்போது குறித்த பகுதி மக்களால் பழமை வாய்ந்த ஆதாரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அங்கு விஜயம் மேற்கொண்டிருந்த அதிகாரிகளுக்கு காட்டப்பட்டதுடன் தாம் 1960 ம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னராகவே தாம் தொடர்ந்து விவசாயத்தை மேற்கொண்டு வருவதாகவும் குறித்த வயல் நிலங்களாலே தமது வாழ்வாதாரத்தை நம்பி வாழ்வதாகவும் பிரதேச வாசிகளால் தெளிவான விளக்கங்களும் அளிக்கப்பட்டன இதன்போது குறித்த பகுதியிலுள்ள மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்பதோடு எதிர் வரும் ஒரு சில தினங்களுக்குள் புதைபொருள் திணைக்கத்தின் அதிகாரிகள் பிரதேச செயலாளர் மாகாண காணி ஆணையாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிளை முதலமைச்சர் காரியாலயத்திற்கு அழைத்து முதைலமைச்சர் தலைமையில் குறித்த காணி விடயமாக உரிய தீர்வை பெற விசேட கலந்துரையாடல் இடம்பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :