புறகோட்டையில் இருந்து எலகந்த நோக்கி பயணிக்கும் இல 107 பஸ்களில் தனியார் போக்குவரத்திற்கு சொந்தமான பஸ்களே அதிகம். இவற்றில் சில பஸ்களில் பஸ் கட்டண விதிமுறைகளுக்கு அமைவாக கட்டணத்தை அறவிட்டாலும் கூட சில பஸ்களில் கட்டண தொகைக்கு அதிகமாகவே அறவிடப்படுகின்றன.
இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் கொச்சிகடை ஊடாக பயணித்த பஸ்ஸில் ஆமர் வீதி மற்றும் வத்தளை வரை பயணித்த பயணிகள் இருவர் தமக்கான கட்டணமாக 30 ரூபாவை (வத்தளை 20 ரூபா, ஆமர் வீதி 9 ரூபா) நடத்துனரிடம் வழங்க வேண்டும். 11 ரூபாய் இல்லாத காரணத்தால் பயணி 40 ரூபாவை நடத்துனரிடம் வழங்க நடத்துனர் மிகுதி பணமாக 7 ரூபாய் மாத்திரமே வழங்கியுள்ளார்.
மிகுதி பணத்தை பெற்ற பயணி கொச்சிகடையிலிருந்து ஆமர் வீதிக்கு 10 ரூபாய்தானே என கேட்க நடத்துனரோ 'நீங்கள் ரூல்ஸ் பேச வேண்டாம். இதுதான் நடைமுறை. உங்கள் 3 ரூபாய் பணத்தை எடுத்து நான் பேங்கில் போட போவதில்லை. மற்றவர்களை குழப்ப வேண்டாம்' என மேலும் பேசி கொண்டே செல்ல அவருடன் வாக்குவாதம் செய்வதில் பயனில்லை என அந்த இரு பயணிகளும் அமைதியாக இருந்துவிட்டனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சில சமயங்களில் அதிக கட்டணத்தை அறவிடும் நடத்துனர்கள் உரத்த குரலில் சத்தமிடுவதால் பெண்களில் பெரும்பாலானோர் மிகுதி பணத்தை கூட கேட்காது போய்விடுகிறார்கள்.
அத்துடன் இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய விடயம் குறித்த பஸ்ஸில் பயண சீட்டு கொடுக்கப்படவில்லை.VK

0 comments :
Post a Comment