உன்னதமான வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஓர் கருவிதான் அன்பு




ன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி பிரச்சினைஅதிகரித்து வருகின்றது இறுதியில் குடும்ப பிளவுகூட ஏற்படுகின்றது. இதற்கு காரணம் கணவன் மனைவி புரிந்துணர்வு இன்மையாகும். 

எதற்கெடுத்தாலும் ஆண்களை மட்டுமே குறை கூறுவதே தவறு அதே சமையம்
பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் கணவனைச் சுட்டிக் காட்டுவதில் தவறில்லை.. நெறி தவறும் 
பிள்ளைகளை எல்லா வழிகளிலும் முயற்சித்து திருத்தி வழிநடத்துவது ஒரு தாயின் தார்மீகக் கடமை.... 'தான்'நல்ல பெயர் வாங்கி கொள்வதை விட, தன்னை சூழ்ந்துள்ளவர்களை நல்லவர்களாக உருவாக்குவது தான் பெண்ணின் பெருஉள்ளம்! உண்மையில், இதைச் செய்யத் தவறுபவர்களே தலைமுறைகளால் சபிக்கப் படுகிறார்கள். 

வாழ்கையில் கணவன் மனைவி உறவு என்பது மிகவும் உன்னதமானது. வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவி தான் அன்பு. வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும் வல்லமை அன்பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னதமான உணர்வுகள் தான் நம் வாழ்வையே அர்த்தமுள்ளதாக மாற்றக்கூடியவையாகும்.

அன்பால் மலரும் உணர்வுகளே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் என்பதை கணவன்- மனைவி உணர வேண்டும். அன்பை வெளிபடுத்தவே திருமணம் நம்மை இணைத்துள்ளது என்று எண்ண வேண்டும். மனிதர்கள்உணர்வுகளுக்குக் கட்டுபட்டவர்கள். 

அதனால் பல நேரங்களில் தவறு செய்யக் கூடும். ஆனால், அத்தகைய தவறுகள் அன்பினால் சீரமைக்கபட வேண்டும். `என்னை நல்லபடியாக வைத்துக் கொள்ளும் அன்பு உன்னிடம் இருந்து நிச்சயம் கிடைக்கும்` என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும்.

நல்ல விஷயங்களின் அடிப்படையில் உருவாக்கபடும் கூட்டுத் தொகுப்பே குடும்பம். நமக்கு நேர்மை அவசியம்.“என் சிந்தனை உள்பட எனது ஒவ்வொரு வார்த்தையும், செயலும் உண்மை. அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன். 

என் நோக்கம், இயல்பான முறையில் நீண்ட நாள் உறவை பேணுவது தான்” என்று இருவரும் எண்ண வேண்டும். நேர்மை இல்லாத குடும்பம் தண்டவாளத்தில் ஓடாத ரெயில் போன்றது. நேர்மை தான் குடும்பத்தின் முதுகெலும்பு என்பதை உணர்ந்து கணவர் மனைவி இருவரும் பரஸ்பர அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

முஹம்மட் ஜெலீல் 
நிந்தவூர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :