கடந்த காலங்களில் அழுத்கம தர்காநகர் போன்ற பிரதேசங்களில் ஏற்பட்ட அசம்பாதவிதம் சம்மந்தமாக குறிப்பிட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கத் தவறியமைக்கு எதிராக தமது எதிர்பினைத் தெரிவிக்கும் முகமாக இப்பகுதிகளில் உள்ள பிரதான வீதிகளில் டயர்போட்டு
வீதித்தடைகளை ஏற்படுத்தி சட்டவிரோதமாக கூட்டம் கூடியும் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகவும் குற்றம் சாற்றப்பட்டு கைது செய்யப்பட்ட பல இளைஞசர்களுக்கு எதிராக அக்கறைப்பற்று பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்னும் சில சந்தேக நபர்களை கைதுசெய்ய வேண்டியுள்ளதினாலும் மேலும் இவ் வழக்கின் ஆரம்ப விசாரணைகள் இ;ன்னும் முற்றுப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு பொலீசாரினால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் பேரில் இவ் வழக்கு மறு தவணைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கு அக்கறைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும்இ மாவட்ட மேலதிக நீதவானும் ஆகிய ஜனாப் எச்.எம்.முஹம்மட்; பஸீல் அவர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது எதிராளிகளின் சார்பில் சிரே~;ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் அவர்கள் ஆஜராகியிருந்தார்.
மேற்படி வழக்கில் குறித்த சந்தேக நபர்கள் எல்லோரும் ஏற்கெனவே பிணையில் செல்ல விடுவிக்கப்பட்டடிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(வழக்கு இல: 7307/B))
.jpg)
0 comments :
Post a Comment