ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
கொழும்பு-10, மருதானை அல் ஹிதாயா மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த நோன்பு திறக்கும் “இப்தார்” நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (19.07.2014) பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும் பட்டயக் கணக்காளருமான ஏ.எப்.பெரோஸ் நூன் தலைமையில் பாடசாலையில் நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் பழைய மாணவர்களின் அங்கத்தவர் தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பழைய மாணவர்கள் அனைவரும் பிற்பகல் 3.30 மணிக்கு பாடசாலைக்கு சமூகமளிக்குமாறு சங்கத்தின் சமூக, நலன்புரிக்குழுத் தலைவர் எம்.என்.யூசுப் கேட்டுள்ளார்.
ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க அங்கத்தினர், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் உட்பட அனைத்து பழைய மாணவர்களையும் இந்நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்குமாறு சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.எஸ்.அப்துல் லத்;தீப் கேட்டுக்கொள்கிறார்.
0 comments :
Post a Comment