அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் தனிப்பட்ட ஊழியர்களுக்கு சலுகை

மைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் தனிப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை குறைப்பதற்கு பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களைத் திரும்பபெறும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் ஜூன் 14 ஆம் திகதி அமைச்சரவை பத்திரம் ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பான சுற்றறிக்கையும் அமைச்சுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அந்த சுற்றறிக்கையில், அமைச்சர் ஒருவரின் பிரத்தியேக செயலாளர் மாத்திரமே அரசாங்க வாகன வசதிகளுக்கு உரித்தானவராவார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்படி பிரதியமைச்சர்களின் பிரத்தியேக செயலாளர்கள், இணைப்பு அதிகாரிகள், பொதுசன உறவு அதிகாரிகள், அமைச்சுக்களின் இணைப்பு செயலாளர்கள் ஆகியோருக்கு வாகன வசதி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் வாகன வசதிகள் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :