அளுத்கம சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உண்மைக்குப் புறம்பான செய்திகளை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லும் கீழ் தரமான ஊடகவியலாளர்களின் செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் வேண்டுகோள் விடுத்த பொதுபலசேனாவின் கலகொட அத்தே ஞானசார தேரர், மக்களுடைய வரிப்பணங்களை கொண்டு இயங்கும் அரச ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட முடியாது. எனவே அரச ஊடகங்கள் தேசிய பொறுப்பினை மீறி செயற்பட முடியாது.
இவ்விடயத்தில் சிங்களவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல்துறை அமைச்சுக்கு நேற்று சென்ற பொதுபலசேனா அதன் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை தேசமானது வரலாற்று பூர்வமாக சிங்களவர்களுக்குச் சொந்தமானது. இத்தகைய நிலையில் அளுத்கம, பேருவளை, தர்கா நகரில் எதிர்பாராத வண்ணம் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் உண்மையான செய்திகளை மூடி மறைத்து உண்மைக்குப் புறம்பான செய்திகளை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்வதற்கு சில ஊடகவியலாளரே காரணமாகும்.
எனவே, பௌத்த மற்றும் ஏனைய இனத்தை சார்ந்த ஊடகவியலாளர்கள் சில தூதுரகத்திடமிருந்து பணம் பெற்று கீழ் தரமான முறையில் செயற்பட்டமையினால் இந்நாட்டின் சிங்களவர்களுக்கும் பிக்குகளுக்கும் அவமரியாதை ஏற்பட்டுள்ளது.
விஷேடமாக, மக்களுடைய வரிப்பணங்களை கொண்டு செயற்படும் அரச ஊடகங்களான தேசிய ரூபவாஹினி, சுயாதீன தொலைக்காட்சிகள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு தேசிய பொறுப்பினை தட்டி கழித்து செயற்பட முடியாது. எனவே, இந்நாட்டின் பெரும்பான்மையினரான சிங்களவர்களுக்கும் நியாய கிடைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரினார்.
.jpg)
0 comments :
Post a Comment