த.நவோஜ்-
வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க இயந்திரப் படகில் சென்றவர்கள் புதிய வகை மீனொன்றினை பிடித்து வந்துள்ள சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை வாவியிலிருந்து ஐம்பது கிலோ மீற்றர் தூரத்தில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற வாழைச்சேனையைச் சேர்ந்த முஹைதீன் பாவா நிஸார் என்பவரின் படகில் சென்றவர்களே இப்புதிய வகை மீனைப் பிடித்து வந்துள்ளனர்.
கருப்பும், சாம்பல் நிறமும் கலந்த நிறத்திலுள்ள மீன் 7.5 கிலோ கிராம் எடையும், நான்கு அடி நீளமும் கொண்டதாக காணப்படுவதாகவும், இப்புதிய வகை மீன் பிடிபட்டுள்ளதாக பிரதேச கடற்றொழில் பரிசோதகருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், அவர்கள் மீனைப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லவுள்ளதாகவும் படகு உரிமையாளர் முஹைதீன் பாவா நிஸார் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment