ஹஜ் முறைமையை சிறந்த ஒரு நிருவாக அமைச்சர் என்றால் நீதி மன்றம் சென்றிருக்கத் தேவையில்லை

அஷ்ரப் ஏ சமத்-

ங்களது செரண்டிப் ஹஜ் உம்ரா முகவர்களில் 65 முகவர்கள் உள்ளனர். இவர்களில் அதில் 35 ஹஜ் அனுப்பும் முகவர்கள் உள்ளோம். 85 கோட்டா கொடுத்த முகவர்களும் 5அரை இலட்சம் - 6 அரை இலட்சங்கள் தற்பொழுது ஹாஜிகளிடம் அறவிடுகின்றனர். 

85 கோட்டா அல்லது 50 கோட்டாக்கள் என்.எம் ரவல்ஸ்க்கு கிடைத்திருந்தால் என்னால் 3அரை இலட்சத்துக்கும் எனக்கும் இலாபம் வைத்து ஹஜ்ஜூக்கு அனுப்ப முடியும். இந்த நாட்டில் 30 ஆயிரம்பேரை மக்காவுக்கு கூட்டிக் கொண்டுபோன அனுபவத்தின்படியும் கடந்த காலத்தில் அவ்வாறு கொண்டுசென்ற அனுபவத்திலும்தான் இத் தகவல்களை சொல்லுகின்றேன். என கூறுகின்றார் என்.எம் ரவல்ஸ் உரிமையாளர் முஹம்மத் ஹாஜி.
(2240 X 6.5 இலட்சம்) அறவிடுபவர்கள் மேலதிக அறிவிடும் 3 இலட்சம் ருபாபடி மொத்தம் 67 கோடி ருபா பணம் எங்கே போகின்றது. இதற்கான கொமிசன் யாரின் சாக்குக்குள் போகின்றது.

இலங்கையில் அன்றாடம் தமது பணத்தை சிறுகச் சிறுகச் சேர்த்து ஹஜ் செல்லுவதற்காக நிய்யத(;நம்பிக்கை) வைத்த ஏழை பாமர அப்பாவி முஸ்லீம்களின் பணத்தை யார் சம்பாதிக்கின்றனர்?;. இலங்கை மக்களோ அரசாங்கமோ ஜனாதிபதியோ இதனை தலையிட்டு இந்த அநியாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும். என வேண்டிக் கொள்கின்றேன்.

7 வருடங்கள் பிராஜா உரிமை இன்றி குற்றமிழைத்தவர். கொழும்பு மேயராக இருந்த காலத்தில் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்கப்படும் 'யூணிபோம்' சீறுடைகள் கொள்வனவில் மோசடி செய்திருந்தார். என்ற குற்றம் நிறுபிக்கப்பட்டு இந்த நாட்டின் சட்டத்தின் முன் குற்றவாளியானவர். கேவலம் அன்றாடம் தமது வயிற்றுப் பிழைப்பிற்காக மக்கா செல்லும் ஹாஜிகளுக்கு இடியப்பம் சுட்டு விற்பவர்களைக்கூட ஹஜ் விசா மோசடிக்காரர் என்று அமைச்சர் பௌசி கூறுகின்றாறே ? 2240 பேர் போகும்போது வைத்தியர்கள் அவரது உதவியாளன், சமையல்காரர்,இடியப்பம் சுடுபவர் ஹஜ் வழிகாட்டும் மௌலவிமார்கள் அதிகாரிகள் எனவும் மக்கா போகத்தானே வேண்டும்.
இந்த ஹஜ்முகவர்கள் பிராஜா உரிமை இழக்கும் அளவுக்கு குற்றமிழைத்தவர்கள் அல்ல. ஹாஜிகளை அழைத்துச் செல்லும்போது முகவர்களுக்கு ஆங்காங்கே இயற்கையாக சிறிய குறை நிறைகள் வருவது இயற்கைதான்.

ஹஜ் கோட்டாக்களை கூடுதலாக கொடுக்கும் முகவர்கள் தேர்தல்கள் காலங்களில் தேர்தல் செலவிணத்துக்கு பண உதவி செய்கின்றார்களே.
பெற்றோலியம் அமைச்சராக இருந்த காலத்தில் 'கெஜிங'; நிறுவணத்தில் பல மில்லியன் ருபா மோசடி செய்தமையினாலேயே அப் பதவியில் இருந்து அவர் தூக்கி எறியப்பட்டார்.

மேற்கண்டவாறு செரண்டிப் ஹஜ் உம்ரா முகவர்கள் சங்கத்தின் தலைவர் எம்.எஸ் முஹமட் நேற்று(22) கொழும்பு கலாதாரி ஹோட்டலில் ஹஜ் கோட்டா பற்றிய விசேட ஊடகவியலாளர் சந்திப்பையும் இப்தார் வைபவமொன்றையும் நடாத்தினார். அங்கு அவர் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்று முன்தினம் சிரேஸ்ட அமைச்சர் ஹஜ் கோட்டாக்களை உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கதக்கதாகவும் அதற்காக இடைக்கால தடைஉத்தரவு இருந்தபோதிலும் 12ஆம் திகதி ஹஜ் கோட்டா பட்டியல் ஜித்;தாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார். ஒருபோதும் அப்படி அவர் பேப்பரில் டைப் பண்னி அனுப்பும் லிஸ்;ட் அல்ல ? அதற்கு முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளரிடம் வழங்கிய விதியின்படி முகவர் பட்டியலை பதிவு செய்து அனுப்புவதற்கு கணனி முறை வழங்கப்பட்டுள்ளது. அதில் பட்டியலை டவுன்லோட்பண்னி உரிய யுசர் ஊடகா அவரது பாஸ்வேட்டைப் பயண்படுத்தியே பணிப்பாளர் அனுப்ப வேண்டும். கடந்த ஆண்டும் இந்த முறைப்படியே லிஸ்ட் அனுப்பட்டது.

மேலும் இலங்கைக்கு வழங்கும 2240 ஹஜ்கோட்டாக்களில் 1000 விசாக்கள் கருப்புச் சந்தைக்கு போகின்றது. சில முகவர்கள் ஒவ்வொரு கோட்டாவையும் 2 இலட்சம் வாங்கிக்கொண்டு பெரிய முகவர்களுக்கு விற்கின்றனர். இதனால் 200மில்லியன் ருபாவை அவர்கள் இலங்கையில் இருந்துகொண்டு மிக இலகுவாக சம்பாதிக்கின்றனர். 
 
இதற்காகத்தாண் செரண்டிப் முகவர் சங்கங்கள் 65 உறுப்பிணர்களும் ஒப்பமிட்டு அலறிமாளிகையில் (நோன்பு திறக்கும் வைபவத்தில்) ஜனாதிபதியை சந்தித்து ஹஜ் முகவர் விடயத்தில் நீதி பெற்றுத் தருமாறு கடிதத்தை நேரடியாக ஒப்படைத்துள்ளோம்.
வருடாந்தம் முஸ்லிம் சமய திணைக்களத்தில் ஹஜ் செல்லுவதற்காக 2000 பேர் பதிவு செய்திருந்தார்கள் அவர்கள் 5- 6 அரை இலட்சம் ருபா என்றதால் தமது பதிவுகளை கென்சல் பண்னியுள்ளார்கள். இதற்கும் உரிய அமைச்சர் பதில் சொல்ல வேண்டும்.

எனக்கு இம்முறை ஹஜ் கோட்டா குறைய வழங்கியதற்காக நான் இதனைச் சொல்லவில்லை. யாராக இருந்தாலும் நீதி, நீயாயம் அல்லஹ்வின் தூய கடமையில் நிதி மோசடி கோட்டா நீதியறற் முறையில் பங்கீடுகளை எதிர்த்தே எனது சகோதர முகவர்களுக்காகவே நான் பாடுபடுகின்றேன். இந்த ஹஜ் முறைமையை சிறந்த ஒர் சீர் நிருவாக அமைச்சர் என்றால் இதனை நன்கு திட்டமிட்டு சரியான நிர்வாக முறையில் இதனை சீர்படுத்தியிருந்தால் இப் பிரச்சினை நீதிமன்றம் செல்லத் தேவையில்லை. நோ பிளேனீங், நோ குட் அட்மினிஸ்ரேசன். என முஹம்மத் ஹாஜி கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :