ஐ.எம்.வஸீர் -
தேசியகாங்கிரஸினால் வருடந்தோறும் நடாத்தப்படும் இப்தார் நிகழ்வு இம்முறையும் அக்கரைப்பற்று மாநகரசபை வளாகத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேசியகாங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சருமானஅல்ஹாஜ். ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
விசேட அதிதிகளாக தேசியகாங்கிரஸின் தேசியஅமைப்பாளரும் கிழக்குமாகாணஅமைச்சருமானஎம்.எஸ்.உதுமாலெவ்வைஅவர்களும் மற்றும் அதிதிகளாககிழக்குமாகாண சபை உறுப்பினர்களானஎம்.எல்.ஏ. அமீர்,சட்டத்தரணிஆரிப் சம்சுதீன் மற்றும் இன்னும் பல அரசியல் பிரமுகர்களும் அரச உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இவ் இப்தார் நிகழ்வின் போது விசேட மார்க்க சொற்பொழிவு கலாநிதி தீன் முஹம்மத் அவர்களினால் நடாத்தப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment