பழுலுல்லாஹ் பர்ஹான்-
கட்டார்; ஏர்வேஸ் விமானப் பயணச் சீட்டு முகவர் நிலையத்தின் பிராந்திய காரியாலயம் மட்டக்களப்பில் கடந்த 19-07-5014 சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இல.28, பார் வீதி, மட்டக்களப்பு எனும் முகவரியில் அமையப்பெற்றுள்ள மேற்படி விமானப் பயணச் சீட்டு முகவர் நிலையத்தின் பிராந்திய காரியாலயத்தை கட்டார் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட முகாமையாளர் ஜெய் ஜோகப் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
கட்டார் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுவனத்தின் முகவர் ஸ்தாபனமான சர்மிளா ட்ரவல் அன் ருவர்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில்; கட்டார்; ஏர்வேஸ் விமானப் பயணச் சீட்டு முகவர் நிலையத்தின் பிராந்திய காரியாலயம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கண்டி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அதுல டி சில்வா ääமட்டக்களப்பு மா நகர சபையின் ஆணையாhள் எம்.உதயகுமார்ää கட்டார்; ஏர்வேஸ் விமானப் பயணச் சீட்டு முகவர் நிலையத்தின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலய முகாமையாளர் வி.முத்துசாமி உட்பட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்ட கட்டார் ஏர்வேஸ் விமானப் பயணச் சீட்டு முகவர் நிலையத்தின் பிராந்திய காரியாலயத்தில் கட்டார்; ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுவனத்தில் பெறும் அனைத்து சேவைகளையும் பொது மக்கள் பெற முடியுமென கட்டார் ஏவைஸ் விமானப் பயணச் சீட்டு முகவர் நிலையத்தின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலய முகாமையாளர் வி.முத்துசாமி தெரிவித்தார்.
.jpg)




0 comments :
Post a Comment