எம்.எச். 17 விமானத்தில் பயணித்து உயிரிழந்த அப்பாவிச் சிறுவர்களில் 22 சிறுவர்களது புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கிழக்கு உக்ரேனிய பிராந்தியத்தில் வெடித்து சிதறிக் கீழே விழுந்த மலேசிய எம்.எச். 17 விமானத்தில் பயணித்து உயிரிழந்த அப்பாவிச் சிறுவர்களில் 22 சிறுவர்களது புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

மேற்படி சிறுவர்கள் தமது குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழிக்கவும் உறவினர்களை சந்திக்கவும் விமானப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர். 

இந்த விமான அனர்த்தத்தில் உயிரிழந்த 3 பாலகர்களில் ஒருவரான கேலா தோஸ் (21 மாதம்) மார்னிக்ஸ் வான் டென் ஹென்ட் (12 வயது) அவரது சகோதரர் பியாஸ் (15 வயது) சகோதரி மார்கயுக்ஸ் (8வயது) இந்தோனேசியாவிலுள்ள தமது பாட்டியின் கல்லறைக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த மார்டின் போலிஸன் (5வயது) அவரது சகோதரி ஸ்ரி (3வயது) மலேசியாவைச் சேர்ந்த அப்ஸல் ஜியீ (17வயது) அவரது சகோதரர் அபிப் (19 வயது) மற்றுமொரு சகோதரரான அப்ருஸ் (13வயது) சகோதரியான மார்ஷா (15வயது) சகோதரர்களான மோ மஸ்லின் (12வயது) ஒரிஸ் (8வயது) அவர்களது சகோதரியான எவி (10 வயது) பாலிக்கு விடுமுறையைக் கழிக்கச் சென்ற சகோதரிகளான ரெஸ் துறுக் (10 வயது) எவி (8 வயது) தமது பெற்றோர் மற்றும் இரு சகோதரர்கள் சகிதம் உயிரிழந்த நெதர்லாந்து சகோதரிகளான அமெல் வெல்ஸ் ஜின்ட் விடுமுறை சுற்றுலா மேற்கொண்ட வொதர் ஸ்மோலென் பேர்க் மற்றும் அவரது சகோதரி கறிஜின் தனது நெதர்லாந்து தந்தை மற்றும் இந்தோனேசிய தாயுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த யெலெனா கிளாறிக் ஹுயிஸென் நெதர்லாந்தைச் சேர்ந்த வான் வெல்ட்ஹுயி ஸன் தம்பதியின் பச்சிளம் பாலகனான மகன் ஆகியோரது புகைப்படங்களே மேற்படி வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களில் உள்ளடங்குகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :