பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை யூனிவர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று (22-07-2014) மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் கழகத்தின் தலைவர் கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் விஷேட விருந்தினர்களாக கல்முனை பிரதேச செயலாளர் மங்கள விக்ரம ஆராச்சி, கழகத்தின் ஆயுட்காலப் போசகர் மைஹோப் குழுமத்தின் உரிமையாளர் லயன் சித்தீக் நதீர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் அதிபர்கள்,ஆசிரியர்கள் உள்ளீட்ட ஊர்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
கழகத்தின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.எம்.முபீத் இப்தாரில் கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். கழகத்தின் செயலாளர் ஏ.எம்.எம்.ரஜி ஆசிரியருடன் கழக உறுப்பினர் இந்த இப்தார் நிகழ்வுக்கான ஏற்பாடு செய்திருந்தனர்.
.jpg)



0 comments :
Post a Comment