ஏ.ஜி.ஏ.கபூர், அக்கரைப்பற்று-
இனங்களுக்கிடையில் சமாதானம், சகவாழ்வை மேம்படுத்தும் நோக்கில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வொன்று நேற்று முன்தினம் (21.07.2014) திங்கட்கிழமை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.கலீலுர் ரஹ்மான் தலைமையில்; நடைபெற்ற இந் நிகழ்வில் , கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளர் கே.அருந்தவராஜா, திருக்கோணமலை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பாஸ்கரன், அக்கரைப்பற்று திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் யூ.எல்.ஏ.ஹஸன், மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெவ்வையின் பொதுசனத் தொடர்பு உத்தியோகத்தர் எம்.எஸ்.எஸ்.ஜஹ்பர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ஏ.நாஹிப், ஏ.பி.ஸரீப் மற்றும் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளில் கடiயாற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி திணைக்கள தையல் பயிற்சி நிலைய ஆசிரியைகள், கிராம அபிவிருத்தி சங்கப் பிரதிநிதிகள், மாவட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் என ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.கலீலுர் ரஹ்மான் அவர்களின் அறிமுக உரையைத் தொடர்;ந்து, கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளர் கே.அருந்தவராஜா உரையாற்றினார்.
தொடர்ந்து அக்கரைப்பற்று பெண்கள் அரபுக் கல்லூரி அதிபா எம்.அப்துல் ஹமீட் மௌலவி அவர்கள் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு (பயான்) வழங்கினார்.
அதனைத் தொடர்ந்;து இடம்பெற்ற கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் அவர்களின் சிறப்புரையின்போது, இனங்களுக்கிடையில் சமாதானம், சகவாழ்வை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.கலீலுர் ரஹ்மான் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முன்மாதிரியான இந் நிகழ்வைப் பாராட்டியதோடு, இவ்வாறான நிகழ்வுகள்இனங்களுக்கிடையில் சமாதானம், சகவாழ்வை மேம்படுத்த பெரிதும் உதவும் என்றார்.
இறுதியாக இப்தார் வைபவம் இடம்பெற்றதோடு இஷா தொழுகையைத் தொடர்ந்து இரவு உணவும் வழங்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment