“சமய சமூக கலாசார மேம்பாட்டுக் குழு” -மருதமுனையில்

பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனையில் கல்வி, கலாசார, சமூக சேவைகள் சமூகங்கள் ஒருங்கிணைப்பு இனநல்லுறவு போன்ற விடையங்களை “சமய சமூக கலாசார மேம்பாட்டுக் குழு” என்ற பெயரில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டள்ளதாக மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபையின் இணைப்பாளர் அஷ்செய்க் எப்.எம்.ஏ.அன்ஸார் மௌலானா தெரிவித்தார்.

மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபை பிரதிநிதிகள் மற்றும் பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் தஃவா இயக்கங்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்ட செயலமர்வு அண்மையில் (12-07-2014) மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்செய்க் எம்.ஐ.ஹ_சைனுதீன் றியாழி தலைமையில் மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசல் மேல் மாடியில் நடைபெற்ற போதே இந்தத்;தீர்மானம் எடுக்கப்பட்டதாக அஷ்செய்க் எப்.எம்.ஏ.அன்ஸார் மௌலானா தெரிவித்தார்.

மேற்படி செயலமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை செயலமர்வின்; இறுதியில் மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்செய்க் ஏ.ஆர்.எம். சுபைர் தொகுத்து வழங்கியதாகவும், அத்துடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் வெளியீடான செய்தி மடலும் செயலமர்வில் பங்கு பற்றிய பிரதி நிதிகளுக்கு வழங்கியதாகவும் அஷ்செய்க் எப்.எம்.ஏ.அன்ஸார் மௌலானா மேலும் தெரிவித்தார். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :