அரசாங்கம் இலவசக் கல்வியை இல்லாதொழிக்கும் செயற்பாடொன்றை ஆரம்பித்துள்ளது-ரணில் - VIDEO

ரசாங்கம் இலவசக் கல்வியை இல்லாதொழிக்கும் செயற்பாடொன்றை ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹோமகம பகுதியில் இடம்பெற்ற நிழ்வொன்றில் உரையாற்றியபோதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.
அன்று போர்த்துக்கேயர்கள் விகாரைகளையும், கோவில்களையும் அழித்தனர். அதேபோன்று (பீப் ஒலி…) இன்று இலவசக் கல்வியை அழிக்கின்றனர், என்பதனை கவலையுடன் கூற வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந் நாட்டின் கல்வியை முழுமையாக இல்லாதொழித்தனர்.  பல்கலைக்கழங்களுக்கு நிதி வழங்குவதில்லை. தனியார் நிறுவனங்களுக்கு செல்லுமாறு கூறுகின்றனர். இல்லாவிடின் வெளிநாடு செல்லுமாறு கூறுகின்றனர். எனவே நாம் இதனை மாற்றியமைக்க வேண்டும். அதற்காக (பீப் ஒலி…) விரட்ட வேண்டும். அதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும். மக்கள் கருத்துக்கணிப்பொன்றை நடாத்த வேண்டும். தேர்தல் ஒன்று நடைபெறாவிடின் வீதிக்கு இறங்கி அவர்களை விரட்டும் வரை போராட வேண்டும்.

#nf
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :