நிந்தவூர் வைத்தியசாலையி வீதியின் அவலம்: இடம் பிடிக்குமா கிண்ணஸ் சாதனையால்?

முஹம்மட் ஜெலீல்
நிந்தவூர்

தாங்க நமது நிந்தவூர் வைத்தியசாலையின் வீதியின் அவலம், உண்மையிலே இலங்கையில் மிகவும் மோசமான வீதியில் நிந்தவூர் வைத்தியசாலை வீதி தான் முதல் இடத்தை பிடித்துகொடிருக்கிறதென்பது பலரின் கருத்து ஆஹா... ஆஹா என்ன பெருமை...

தற்போது நிந்தவூரில் மிகவும் மோசமான வீதியில் நம்பர் 1ஆக, இடம்பிடித்து காட்சியளித்துகொண்டிருக்கும் நிந்தவூர் வைத்தியசாலை வீதி, இதன் சாதனை என்னவென்றால் உலகிலையே அதிகூடிய காலங்களாக புணரமைக்கப்படாமல் அதிகளவு குண்று குழிகளும், மக்கள் இவ் வீதியினுடாக வைத்தியசாலைக்கு செல்ல முடியாமையும், நோயாளிகளை அவசர சிகீச்சைகளுக்ககா இவ் வீதியினுடாக எடுத்து செல்ல முடியாத சூழ்நிலையில் சாதனையில் நம்பர் 1ஆக. திகழ்கின்றது.

யாருக்கும் பிரயேசனம்மற்ற இவ் வீதி எதற்க்காக வைத்தியசாலை வீதியென்ரு பேர் வாங்கிக்கொண்டிருக்கின்றது..? என்னைப் பொருத்தவரையில் இவ் வீதியால் ஒரே ஒரு பிரயேசனம் மக்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு,

இவ் வீதியை அண்மித்த மக்களுக்கு இவ் வீதியை அளவை அடிப்படையில் பங்கிட்டு கொடுத்தால் அம் மக்கள் வீட்டு தோட்டங்கள், பயிர் வேளான்மை போன்றவற்ரை பயிரிட்டு அன்றாட வாழ்க்கை சிலாவணியை முன்னகர்த்திச் செல்ல இவ் வீதியை பங்கிட்டு கொடுக்கப்படுமாயின் அதை அண்மித்த மக்களுக்கு ஒரு பலன் தர வாய்ப்புக்கள் உண்டாகுமென்பது எனது கருத்து, மக்களாகிய நீங்கள் உங்கள் கருத்துகள் தான் என்ன......?

நிந்தவூர் வைத்தியசாலை வீதி பல ஆண்டுகளாக புணரமைக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் கிடப்பதை நிந்தவூர் மக்களாகிய நாம் நன்கு அறிந்த விடையம் இவ் வீதியின் அவல நிலை அறிந்தும் இத்தனை ஆண்டு காலங்களாக இவ் வீதி புணரமைக்கப்படாமைக்கு நிந்தவூர் மக்களும் ,அரசியல் சார்பாலர்கள் ,இவ் வீதித் துறைசார்ந்த அமைப்புக்கள் அனைவரும் உண்மையில் வெக்கப்படவேண்டும்.


காரணம் இதுவரைக்கும் இது குறித்து மக்களாலையோ, அரசியல் நிறுவனகளாலையோ, இல்லை பிரதேச சபையினாலையோ எந்தவொரு முயற்சியும் எடுக்கப்பட்டவில்லை அப்படி முயற்சி எடுக்கப்பட்டிருந்தால் இத்தனை ஆண்டு காலங்களாக இவ் வீதி புணரமைக்கபடாமல் இருந்திருக்க வாய்ப்புக்களே இல்லை.

அதன் அடிப்படையில் இத்தனை ஆண்டு காலங்களாக இவ் வீதி கவனிப்பாரற்று கிடப்பதையடுத்து நிந்தவூர் மக்களாகிய நாம் அனைவரும் வெக்கப்பட்டு தலை குனிய வேண்டும் .!

இவ் வீதி இதுவரை காலங்களாக புணரமைக்கப்படாமைக்கான காரணம்தான் என்னவென்பதை ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கை எடுப்பதற்க்கு நம்மில் எவரும் இதுவரைக்கும் முன்வரவில்லை.
இது தொடர்பாக ஏற்க்கனவே ஒரு பதிவில் நான் கூறியபோது சிலர் கருத்து கூறியிருந்தார்கள்

இவ் வீதி புணரமைப்படுவதற்க்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்த காலங்களில் இவ் வீதி புணரமைக்கப்படமையினால் தற்போதைய காலங்களில் இன் நிதித் தொகை போதாமையினால் நாங்கள் இவ் வீதியை காட்சிக்கு விட்டிருக்கின்றேம் என்றெலாம் சிலர் கருத்து கூறியிருந்தார்கள்.

இதை எம்மால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களேயாகும், அப்படியென்றால் நிதி ஒதுக்கப்பட்ட காலப் பகுதிகளில் ஏன் இவ் வீதி புணரமைக்கப்படாமல் இத்தனை ஆண்டுகளாக தாமதித்து தற்போதைய காலங்களில் இன் நிதித் தொகை போதாமையென்ரு கருத்து கூறமுடியும் ..?

இதில் நாம் இன்னும் கருத்துக்கள் கூறி காலத்தை வீணடிப்பதை விட நம் நிந்தவூர் மக்களாகிய நாம் அனைவரும் இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு நமது வைத்தியசாலை வீதியை புணரமைப்பத்ற்க்குரிய வழியை தேர்ந்தெடுத்து நம்மால் முடிந்தவரை நமது பங்களிப்பினை வளங்குவதற்க்கு அனைவரும் முன்வர வேண்டும்மென்பது எனது கருத்து.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :