இலங்கைக்கு முதன் முறையாக வரவழைக்கப்பட்ட கடற்கரை மணலை சுத்தம் செய்யும் இயந்திரம்



பழுலுல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஜேர்மன் நாட்டில் இருந்து 02 இரண்டு கோடி ரூபா செலவில் இலங்கைக்கு முதன் முறையாக வரவழைக்கப்பட்ட கடற்கரை மணலை சுத்தம் செய்யும் அதிநவீன தொழிநுட்ப்பத்திலான இயந்திரத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 24-06-2014 இன்று செவ்வாய்க்கிழமை மாலை காத்தான்குடி கடற்கரை அன்வர் பள்ளிவாயலுக்கு முன்பாக இடம்பெற்றது.

காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்தோடு கௌரவ அதிதிகளாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா , சவூதி அரேபிய நாட்டு பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதன் போது ஜேர்மன் நாட்டில் இருந்து இலங்கைக்கு முதன் முறையாக வரவழைக்கப்பட்ட கடற்கரை மணலை சுத்தம் செய்யும் அதிநவீன இயந்திரத்தை பயன்படுத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பிரமுகர்களினால் காத்தான்குடி கடற்கரையின் ஒரு பகுதி சுத்தம் செய்யப்பட்டு இயந்திரம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2 கோடி ரூபா செலவில் ஜேர்மனிலிருந்து இலங்கைக்கு முதன் முறையாக வரவழைக்கப்பட்ட கடற்கரை மணலை சுத்தம் செய்யும் அதிநவீன இயந்திரம் காத்தான்குடியில்- பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இயந்திரத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.படங்கள் இணைப்புபழுலுல்லாஹ் பர்ஹான்-மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஜேர்மன் நாட்டில் இருந்து 02 இரண்டு கோடி ரூபா செலவில் இலங்கைக்கு முதன் முறையாக வரவழைக்கப்பட்ட கடற்கரை மணலை சுத்தம் செய்யும் அதிநவீன தொழிநுட்ப்பத்திலான இயந்திரத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 24-06-2014 இன்று செவ்வாய்க்கிழமை மாலை காத்தான்குடி கடற்கரை அன்வர் பள்ளிவாயலுக்கு முன்பாக இடம்பெற்றது.காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்தோடு கௌரவ அதிதிகளாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா , சவூதி அரேபிய நாட்டு பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதன் போது ஜேர்மன் நாட்டில் இருந்து இலங்கைக்கு முதன் முறையாக வரவழைக்கப்பட்ட கடற்கரை மணலை சுத்தம் செய்யும் அதிநவீன இயந்திரத்தை பயன்படுத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பிரமுகர்களினால் காத்தான்குடி கடற்கரையின் ஒரு பகுதி சுத்தம் செய்யப்பட்டு இயந்திரம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் சவூதி அரேபிய நாட்டு பிரமுகர்கள்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கனான பாக்கீர்,அலி சப்ரி,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் ,ஊர் பிரமுகர்கள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் ,பெரும் திரளான பொது மக்கள் ,ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இவ் இயந்திரம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அயராத முயற்ச்சியின் பயனாக காத்தான்குடி நகர சபைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :