நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று பிற்பகலில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேசவிருக்கின்றார் என்று கூறப்படுகின்றது.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றமை குறித்து அமைச்சர் ஹக்கீம் சீற்றமடைந்திருக்கும் நிலையிலும் - அது பற்றிய விவகாரத்தை ஐ.நா. மற்றும் மேற்குலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு போனமை மூலம் அரசுக்கும் நாட்டுக்கும் நீதி அமைச்சர் ஹக்கீம் துரோகமிழைத்து விட்டார் என்ற விசனம் அரசுத் தலைமையிடம் நிலவும் இவ்வேளையிலும் - இந்தச் சந்திப்பு நிகழ்வது குறிப்பிடத்தக்கதாகும்

0 comments :
Post a Comment