ஈராக் போர் வளையத்தில் சிக்கி நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாக உயிர் தப்பி தாயகம் திரும்பியவர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இதனிடையே அந்த நாட்டில் முன்னாள் அதிபர் சதாம் உசேனை தூக்கிலிட உத்தரவிட்ட நீதிபதியை சிறைபிடித்த தீவிரவாதிகள், அவரை கொடூரமாக கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈராக்கில் சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவீரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.
இதனால் அங்கு வேலைக்கு சென்ற இந்தியர்கள் நிலை பரிதாபமாக உள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக அங்கிருந்து தாயகம் திரும்பி வரும் இந்தியர்கள், ஈராக்கில் நிலைமை படும் மோசமாக இருப்பதாகவும், யாருடைய உதவி இல்லாமல் தங்களது முயற்சியாலையே நாடு திரும்பியிருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
இதனிடையே ஈராக் தலைநகரம் பாக்தாக்கை நோக்கி தொடர்ந்து முன்னேறிவரும் தீவிரவாதிகள் முன்னாள் அதிபர் சதாம் உசேனை தூக்கிலிட உத்தரவிட்ட நீதிபதி ரபுக் அப்துல் ரகுமானை சிறைப்பிடித்து கொடூரமாக கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சதாம் உசேனின் உதவியாளர் இசாத் இப்ராமின் அல்லூரி தனது பேஸ்புக் சமூக வலைதளத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஆனாலும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment