நாற்பத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட் கைப்பற்றப்பட்டுள்ளது

த.நவோஜ்-

ட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட, தடைசெய்யப்பட்ட நாற்பத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட்டுகளை சனிக்கிழமை ஓட்டமாவடிப் பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையக் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி ஓட்டமாவடி நாவலடிப் பிரதேசத்தில் வைத்து இச்சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து சம்மாந்துறைக்கு லொறி ஒன்றில் அரிசி, சீனி ஆகிய பொருட்களுடன் மறைத்து வைத்து கொண்டு வரப்பபட்ட 800 பண்டல்கள் அடங்கிய பதினாறு பெரிய பெட்டிகள் கைப்பற்றப்பட்டதாகவும், இதன் உத்தேசப் பெறுமதி நாற்பத்தைந்து இலட்சம் ரூபா என்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.

சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்களும், லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்றத்தின் பதில் நீதிபதி எம்.பி.எம்.ஹுசைன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவர்களை 2014.06.23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :