அளுத்கமை, பேருவளை, வெலிப்பென்ன மற்றும் மத்துகம பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக மேலும் 15 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்துள்ளது.
முன்னதாக, வன்முறைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக, கொழும்பு குற்றபுலனாய்வு திணைக்களம் மற்றும் கொழும்பு குற்றப்பிரிவு உள்ளிட்ட 5 விசாரணை குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
எனினும், விரைவாக விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை இனங்காண்பதற்காக புதிதாக மேலும் 15 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் மொத்தமாக 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய 35 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய ஏனைய நபர்களை கைது செய்வதற்கான வீடியோ ஆதாரங்கள் மற்றும் புகைப்படங்கள் இருப்பின், அவற்றை பொலிஸாரிடம் வழங்குமாறு பொதுமக்களிடம் பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.

0 comments :
Post a Comment