அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தினால் நடாத்தப்படும்: 'முல்தகல் கிம்மா' கண்காட்சி

 த.நவோஜ்-

ல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தினால் நடாத்தப்படும் 'முல்தகல் கிம்மா' கண்காட்சி சனிக்கிழமை மாலை வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் (ஸஹ்வி) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அல்-கிம்மா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், சவூதி அரேபியாவைச் சேர்;ந்த தனவந்தருமான அஷ்ஷெய்க் முதீப் தவாப் அஸ்ஸபீஈ, இராணுவத்தின் 23 படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கொடிப்பிலி, மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வீ.கமலதாஸ், ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதித் தவிசாளர் ஏ.எம்.நௌபர் மற்றும் சவூதி அரேபிய பாடகர்கள் உள்ளிட்ட அதிதிகளும் கலந்து கொண்டனர்.

அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளரால் மட்டக்களப்பு மாவட்ட கட்டளை தளபதியிடம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்சவிடம் கையளிப்பதற்கான முஸ்லிம் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிச்சனைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்று இராணுவத்தின் 23வது படைப்பிரிவின் கட்டளை தளபதி கொடிப்பிலியிடம் கையளிக்கப்பட்டது.

இங்கு புகைப்படக் கண்காட்சிகள், வாகனப் போக்குரத்து தொடர்பான போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் விவரண நிகழ்வுகள், சிவில் பிரஜைகள் சபை மற்றும் அல்-கிம்மா நிறுவனத்தின் கூடங்கள், இராணுவத்தின் பொறியியல் பிரிவின் காட்சி; கூடம், சிறப்பு நாய்களைக் கொண்ட மிதிவெடி அகற்றும் பிரிவின் காட்சிகள், மருத்துவப் பிரிவு, கோல் மண்டலம் என்பன காட்சிக்கு வைக்கப்பட்டது.

அல்-கிம்மா நிறுவனத்தினால் வலது குறைந்த தமிழ், முஸ்லிம்களுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டதுடன், கண் பார்வை குறைந்தவர்களுக்காக 300 மூக்குக் கண்ணாடிகளும் வழங்கப்பட்டது. 










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :