எம்.எம்.ஏ.ஸமட்-
அறிவை வளர்த்துக்கொள்வதன் மூலமே நம்மை எதிர்நோக்கும் சவால்களுக்கு மிகச் சாதுரியமாக முகம்கொடுக்க முடியுமென என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் குறிப்பிட்டார்.
கல்முனை அல்ஹாமியா அறபுக் கல்லூரியின் 5வது பட்டமளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழைம கல்லூரியின் மன்னர் பைசல் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்:
இக்கல்லூரியின் தலைவர் என்ற வகையில் இக்கல்லூரியின் வரலாறு பற்றிக் கூறுவது பொறுத்தமென்று நினைக்கின்றேன். இக் கல்லூரியினது ஆரம்பம,; 1979 ஆம் ஆண்டு 30 மாணவர்களுடன் ஒரு வாடகைக் கட்டத்தில் தொடங்கப்பட்டது. இக்கல்லூரியினை முன்கொண்டு செல்வதற்காக கல்முனை ஹிமாயத்துல் இஸ்லாம் என்ற ஒரு இயக்கமும் ஆரம்பிக்கப்பட்டது.
பல்வேறு தடைகளைத் தாண்டி வளர்ச்சியடைந்த இக்கல்லூரி, தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து இன்று அல்லாஹ்வின் உதவியுடன் எமது பிரதேச மக்களின், அவர்கள் மனமுவர்ந்து வழங்கிய நன்கொடைகளின் மூலம் கிட்டத்தட்ட 6 ½ ஏக்கர் நிலப்பரப்பில் இக்கல்லூரி வியாபித்துள்ளது.
இதுவரை கிட்டத்தட்ட 170 உலமாக்களை இக்கல்லூரி உருவாக்கியிருக்கிறது. இந்த நாட்டின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் இக்கல்லூரியில் அனுமதி பெற்று மௌலவிகளாகப் பட்டம்பெற்று வெளியாகியுள்ளனர்.
இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்களை நெறிமுறையாக எடுத்துக்கொண்டு அதனை மற்றய மக்களுக்கும் எத்திவைக்க வேண்டும் என்ற ஒரேயொரு நோக்குடன் நாங்கள் எல்லோரும் உழைத்துக்கொண்டிருக்கிறோம்.
எட்டு வருடங்களைக் கொண்ட இம்மௌலவி பட்டத்திற்கான கற்கை நெறியினை தங்கி கற்கக்கூடிய வசதி இங்குள்ளது. ஒரு காலத்தில் அறபு பாடங்களை மாத்திரம் கொண்டு இயங்கி வந்தபோதிலும் தற்போது ழுஃடு உம் இலங்கை அரசினது உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் இக்கல்லூரி மாணவர்கள் பயிற்றப்படுகின்றார்கள்.
மௌலவிமார்கள் இன்னுமொரு நபரினது தயவில் தங்கி நிற்கக் கூடாது. அவர்களுடைய இந்த மார்க்கத்தினை எந்தவித பயமும் இல்லாமல் யாருடைய தயவினையும் எதிர்பார்த்து அந்த பிரச்சாரத்தினை மேற்கொள்ளாமல் தங்களுடைய கால்களிலே சுதந்திரமாக நின்று அவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும்.
அதனால் அவர்கள் அவர்களுக்குரிய வாழ்வில் தனித்து நிற்கக்கூடிய, அவர்களுகென்று ஒரு வருமானத்தினை ஈட்டக்கூடிய பயிற்சிகளையும் வழங்கி, வெளி உலகிற்கு அவர்களை முகம் கொடுக்கக் கூடிய அளவில் பயிற்றுவித்து, இந்த ழுஃடுஇ யுஃடு மற்றும் கணணி போன்ற பாடத்திட்டங்களை நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
இந்த பட்டமளிப்பு விழாவானது மௌலவிமார்களுக்கு பட்டம் வழங்கி அவர்களை மகிழ்;ச்சியுடன் வெளியனுப்பக்கூடிய ஒரு சூழலில் நடாத்தப்படுகின்றது எனக் கருதினாலும் எமது நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கின்ற நிலமை இந்த மௌலவிமார்கள் எதனை எதிர்நோக்குகின்றார்கள் என்று அவர்களுக்கு ஒரு தெளிவு இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.
கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்த எமது மார்க்கமும் எமது மக்களும் எதிர்நோக்கியிருக்கின்ற நெருக்கடிகள், திட்டமிட்டு நாங்கள் இலக்குவைக்கப்படுவதும், எமது மார்க்கம் கொச்சைப்படுத்தப்படுவதும் மற்றய மக்கள் மத்தியில் உலகம் பூராகவும் ஏன் இலங்கையில் நாங்கள் ஒரு நாகரீகமற்றவர்கள் அல்லது நாங்கள் மற்றய மக்களுடன் புழங்கிப் பழகத் தெரியாதவர்கள் என்று காட்டுவதற்கான பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்று ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நாங்கள் விழித்துக்கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பம். நாம் இந்நாட்டில் ஒரு சிறுபாண்மை சமூகமாக இருக்கின்றோம். பெருபான்மை மக்கள் மத்தியில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நும்மைப்பற்றி நாம் தெளிவாக புரிந்துகொண்டு எமது கௌரவத்தினை, எமது மார்க்கத்தினைப் பற்றிய விளக்கத்தினை நாங்கள் மற்றய மக்களுக்கு முன்னால் கொண்டு செல்லவேண்டிய ஒரு கட்டயமான தேவைப்படு உள்ளது.
முஸ்லிம்களை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக 2012 தோன்றிய பிரச்சினை இன்று அளுத்கம நகரில் பல கோடிக்கணக்கான சேதங்களுக்கும் உயிரிழப்புக்களும் வித்திட்டுள்ளமை பெரும் வேதைனையளிக்கிறது.
அவ்வாறான சூழ்நிலையில் இன்று பட்டம் பெறும் மௌவிமார்கள் பட்டம் பெறுவதுடன் உங்களுடைய கடமை முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம்.
அம்மை நோக்கியுள்ள நெருக்கடிகளிலிருந்து இந்த மார்க்கத்தினையும் மக்களையும் எவ்வாறு காப்பாற்ற முடியும் என்று சிந்திப்பவர்களாகவும் இத்தகையை நெருக்கடிகளை அறிவுபூர்வமாக எதிர்கொள்ளக் கூடியவர்களாகவும் மாற வேண்டும்.
அத்துடன், எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய எந்த கற்கைள் உங்களுக்கு உதவுமோ அவற்றைத் தொடர்ந்து கற்றுக்கொள்ளுமாறு இச்சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment