வாழைச்சேனையில் சிசு ஒன்றின் சடலம் மீட்பு

வாழைச்சேனை - சுங்காங்கேணி தாமரைக்குளத்தில் இருந்து சிசு ஒன்றின் சடலத்தினை வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சிசு பொலித்தீன் பையால் சுற்றப்பட்ட நிலையில் குளத்தில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த வீதியால் சென்ற பொது மக்கள் ஏதோ ஒரு உணவை நாய் ஒன்று உட்கொள்வதை அவதானித்துள்ளனர். இதையடுத்து நாயினை துரத்திவிட்டு பார்த்த போது அது சிசு ஒன்றின் சடலம் என்பதை கண்டுள்ளனர்.

இதன் போது சிசுவின் கால் பகுதி முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சிசுவின் சடலத்தினை மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்வதற்கான விரிவான விசாரைணகளை தாம் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :