தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதில் சிக்கல்

ல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களான தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பல விண்ணப்பங்கள் உரிய முறையில் பூரணப்படுத்தப்படவில்லை என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உரிய முறையில் பூரணப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் மீண்டும் விண்ணப்பதாரர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விண்ணப்பத்திற்கு தேவையான முத்திரை ஒட்டப்படாமலும், அதிபர், மாணவர்ளின் கையொப்பம் இன்றியும் .சில விண்ணப்பங்களில் திருத்தமான கையெழுத்து இன்றியும் அனுப்பி வைக்கப்படுவதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் உரிய அளவிலான புகைப்படம் இன்றியும், பிறப்புச் சான்றிதல் உறுதிப் படுத்தப்படாமலும், விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கு முன்னர் பாடசாலை அதிபர்கள் அவற்றை பரிசோதித்து அனுப்பி வைக்குமாறும் வலயக் கல்வி பணிமனைகள் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் ஆட்பதிவு ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சுமார் இரண்டு இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்க வேண்டியுள்ளபோதிலும் இதுவரை அவை கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :