த.நவோஜ்-
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவில் செவ்வாய்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் தோப்பூரைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை மாவட்டம் தோப்பூர் அல்லைநகரைச் சேர்ந்த யூ.பதுறுஸ்ஸமான் (வயது 56) என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டது.
மட்டக்களப்பிலிருந்து தோப்பூரை நோக்கி பயணித்துக் கெண்டிருக்கும் போது இவர் பயணம் செய்த மோட்டர் சைக்கிள் வீதி அருகில் இருந்த தென்னை மரத்தில் பலமாக மோதியதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
வாகரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தள்ளார். இவருக்கு சர்ளக்கரை வியாதியுள்ளதால் அடிக்கடி தலைச்சுற்றினால் மயங்கி விழுபவர் என்று விசாரணைகளின் போது உறவினர்கள் வாகரை பொலிஸிடம் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் செவ்வாய்கிழமை காலை சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையின் உடல் நலத்தை பார்வையிட்டு விட்டு தனதூருக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போதே வாகரையில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் வாகரை வைத்தியசாலையில் இருந்து வாழைச்சேனை ஆதார சைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதி எம்.பி.எம்.ஹுஸைன் விசாரணைகளை நடாத்தியதுடன், சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இவ்விபத்து சம்பவம் தொடர்பாக வாகரை பொலிஸார் விசாரணகைள மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
0 comments :
Post a Comment