சோமாலிய கடற் கொள்ளையர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்கள் உட்பட 11 கப்பல் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சோமாலியாவின் கிலியாகின பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இவர்கள் விடுவிக்கப்பட்டதாக பீ. பீ. சி தெரிவித்துள்ளது.
விடுவிக்கப்பட்டவர்களில் இலங்கையர்கள் இருவரும், இந்தியர் ஒருவரும், பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 7 பேர் மற்றும் ஈரானியர் ஒருவரும் அடங்கியுள்ளனர்.
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடந்த மூன்று வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக பீ.பீ.சி செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வர்த்தக கப்பல் பணிப்பாளர் அஜித் செனவிரத்னவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது.
எம்.வீ.அல்படோ என்ற ஈரான் நாட்டில் பதிவு செய்யப்பட்ட கப்பலில் பணிபுரிந்த சந்தர்பத்தில் சோமாலி கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment