த.நவோஜ்-
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வாகரை பிரதேச செயலகமும் மத்திய சுற்றாடல் அதிகார சபையும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் கரையோரம் பேணல் திணைக்களமும் இணைந்து நடாத்திய உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் வாகரையில் வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் பால்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீட விரிவுரையாளர் கலாநிதி ரீ.மதிவேந்தன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக மாவட்ட சுற்றாடல் அதிகாரி எஸ்.கோகுலன், மாவட்ட திட்ட இணைப்பாளர் ஏ.கோகுலதீபன், பிரதேச செயலக உதவித்திட்டப் பணிப்பாளர் எஸ்.நவீரதன், வாகரை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயதிலக, வாகரை கோட்ட கல்வி அலுவலக அதிகாரிகள், கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வாகரை கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், 'வளர் தளிர்' எனும் செய்தி இதழும் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன், பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
+-+Copy.jpg)
+-+Copy.jpg)


0 comments :
Post a Comment