காங்கேயனோடை முஹைதீன் கிராமிய கடற்தொழில் அமைப்பின் வருடாந்த நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்-படங்கள்

பழுலுல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை முஹைதீன் கிராமிய கடற்தொழில் அமைப்பின் 2014ம் ஆண்டுக்கான வருடாந்த பாராட்டு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் 23-06-2014 நேற்று திங்கட்கிழமை மாலை காங்கேயனோடை அல்-அக்ஷா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

காங்கேயனோடை முஹைதீன் கிராமிய கடற்தொழில் அமைப்பின் தலைவர் எம்.சி.ஏ.கையும் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக ஆரையம்பதி பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் கலந்து கொண்டார்.

இதன் போது காங்கேயனோடை பிரதேச கல்வி வளர்ச்சியில் சாதனை படைத்த சாதணையாளர்கள்,அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள்,முஅல்லிம்கள் ஆகியோர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், பிரதேச செயலாளர் வாசுதேவன்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் ,அதிதிகள் ஆகியோரினால் பதக்கம்,விருது,பரிசு என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு அல் -குர் ஆன் அபிவிருத்தி சபை பரீட்சை, 2013 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றில் சித்தியடைந்த மாணவ மாணவிகள், காங்கேயனோடை பிரதேசத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான ஆண் ,பெண் மாணவர்கள்,பள்ளிவாயல் பேஷ் இமாம்,முஅல்லிம்கள், புலமைப்பரிசில் பரீட்சைக்காக மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் காங்கேயனோடை பிரதேச அபிவிருத்தி சபை தலைவர் ஏ.எல்.எம்.முஜாஹித், காங்கேயனோடை பிரதேச கடற்தொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,உலமாக்கள்,ஊர் பிரமுகர்கள், கல்வியலாளர்கன் ,புத்திஜீவிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :