சலீம் றமீஸ்-
நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையினால் ஜெய்கா திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கிழக்கு மாகாண குடிநீர் விநியோக திட்டத்தின் கீழ் 56மில்லியன் ரூபா செலவில் அம்பாறை – நாமல் ஓயா அம்பகஹவெல்ல பிரதேசத்திற்கான பிரதான குடி நீர் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நாமல் ஓயா பிரதேச சபையின் தவிசாளர் பாலித புஸ்பகுமார தலைமையில் இடம் பெற்ற இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் திணேஷ் குணவர்த்தன கலந்து கொண்டு இத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
இந்த வைபவத்தில் சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சிறியானி விஜய விக்ரம, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம்,வீடமைப்பும் நிர்மாணமும்,கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்;.எஸ்.உதுமாலெப்பை, தேசிய நீர்வழங்கும் சபையின் நிரைவேற்றுப் பணிப்பாளர் நிமால் பியரத்ன, பிராந்திய முகாமையாளர் ஐ.எல்.ஹைதர் அலி உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், மதகுருமார்கள், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



0 comments :
Post a Comment