ரவூப் ஹக்கீமின் சிபாரிசில் நீதி அமைச்சினால் 10 பேர் – சமாதான நீதவான்களாக நியமனம்

பழுலுல்லாஹ் பர்ஹான்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும், உற்பத்தி திறன் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான யூ.எல்.எம்.என். மூபீனின் வேண்டுகோளின் பேரில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சிபாரிசில் நீதி அமைச்சினால் 08 பேருக்கு வழங்கி வைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்திற்கான சமாதான நீதவான் நியமனக்கடிதங்கள் மற்றும் 2 பேருக்கு வழங்கி வைக்கப்பட்ட அகில இலங்கை சமாதான நீதவான் நியமனக்கடிதங்கள் போன்றவற்றை கையளிக்கும் நிகழ்வு 27-06-2014 நேற்று வெள்ளிக்கிழமை மாலை உற்பத்தி திறன் அபிவிருத்தி அமைச்சின்; மக்கள் தொடர்பு அதிகாரியின் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன் போது அகில இலங்கை சமாதான நீதவான்களாக நியமிக்கப்பட்ட மின் அத்தியட்சகர் ஏ.எல்.மாஹிர், ஏறாவூர் பிரதேச சமூக சேவையாளர் எம்.ரி.அஹமட் லெப்பை ஆகியோரும்

மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்திற்கான சமாதான நீதவான்களாக நியமிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம்.பௌமி,ஆசிரியர் எம்.சசிதரன்,தாதி உத்தியோகத்தர் எச்.கே.எம்.நியாஸ்,வர்த்தகர் எம்.எச்.மஸாஹிம்,பள்ளிவாயல் பேஷ் இமாம்களும்,காத்தான்குடி பள்ளிவாயல் கதீப்மார் இமாம்கள் சம்மேளன உறுப்பினர்களுமான மௌலவி ஏ.ஆர்.எம்.மன்சூர், மௌலவி ஏ.எல்.எஸ்.புகாரி, மௌலவி ஏ.எல்.எம்.இப்றாஹீம், மௌலவி கே.எம்.எம். மன்சூர் ஆகியோர்; சமாதான நீதவான்களுக்கான நியமனக்கடிதங்களை உற்பத்தி திறன் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரி யு.எல்.எம்.என். மூபீனிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி) ,மௌலவி ஏ.எல்.மின்ஹாஜ் (பலாஹி), அல் அமீன் வித்தியாலய பிரதி அதிபர் யாஸிர் அறபாத், உற்பத்தி திறன் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியின் இணைப்பாளர் தௌபீக் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :