மீடியா போரத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவுக்கான வேட்புமனு கோரல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2014/2015 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவுக்கான வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ளன.

தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்காகவே வேட்புமனுக்கள் கோரப்படுகின்றன. குறித்த அபேட்சகர்களுக்கான நிபந்தனைகள்:

தலைவர்/ பொதுச் செயலாளர் /பொருளாளர் பதவிக்கு
முன்மொழியப்படும் அபேட்சகர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில்
செயற்குழுவில் குறைந்தபட்சம் ஒரு முறையேனும் பூரணமாக
அங்கத்தவராக இருந்திருத்தல் வேண்டும்.

மேற்குறித்த மூன்று பதவிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட
அபேட்சகர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருப்பின் வருடாந்த
மாநாட்டில் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

15 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 15க்கு மேற்பட்ட அபேட்சகர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருப்பின் வருடாந்த மாநாட்டில் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

வேட்புமனுவிற்காக தயாரிக்கப்பட்டுள்ள, உரிய
விண்ணப்பப்படிவத்தினை அபேட்சகரால் கையொப்பமிடப்பட்டு, இரு
அங்கத்தவர்களால் பிரேரித்து, ஆமோதிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

குறித்த அபேட்சகர் சந்தாவை நிலுவையின்றி செலுத்தியிருக்க வேண்டும். அபேட்சகர் கடந்த 12 மாத காலத்துள் அரசியல் ரீதியான எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டிருத்தல் கூடாது.

வேட்புமனுக்கள் யாவும் 10.06.2014ஆம் திகதிக்கு முன்
செயலாளருக்கு கிடைக்கக்கூடியதாக அனுப்பிவைக்கப்படல்
வேண்டும்.

வேட்புமனுக்கள் தொடர்பான சகல தீர்மானங்களும் தேர்தல் நியமனக் குழுவினாலேயே மேற்கொள்ளப்படும். அதன் முடிவுகள் இறுதியானவை.

இதேவேளை, போரத்தின் 19ஆவது மாநாடு எதிர்வரும் ஜுன் 21ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இந்த மாநாட்டில் தீர்மானங்கள் ஏதும் கொண்டுவர விரும்பினால் அவற்றை எழுத்து மூலம் செயற்குழுவிற்கு ஜுன் 10ஆம் திகதிக்கு முன் பொதுச் செயலாளருக்குக் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை 0773630668 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுச் செயலாளர் றிப்தி அலியை தொடர்புகொள்ள முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :