எஸ்.அஷ்ரப்கான்-
சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய 3 வது ஆண்டு மர்ஹூம் பௌஸி ஞாபகார்த்த சினேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டியில் (நேற்று வெள்ளிக்கிழமை 09) வாழைச் சேனை அல்- அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் ஏ பிரிவு அணி வெற்றி பெற்றது.
சாய்ந்தமருது கடற்கரை பௌஸி ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் கழகத்தின் ஆயுட்காலச் செயலாளர் எஸ். முஹம்மட் கானின் வழி நடாத்தலில், அதன் தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் ஐ.எல்.ஏ. மஜீட் தலைமையில் இடம் பெற்ற இப்போட்டியில் 3-2 கோல்கள் வித்தியாசத்தில் வாழைச் சேனை அல்- அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் ஏ பிரிவு அணி வெற்றி பெற்றது.
இச்சுற்றுப் போட்டிகள் நேற்று காலை முதல் மாலை வரை பௌஸி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. முதலாவது போட்டியில் சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழக சீ பிரிவினரை எதிர்த்து கல்முனை சான்டோஸ் விளையாட்டுக் கழகம் மோதியது. இப்போட்டியில் பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழக சீ பிரிவினர் 3-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
இரண்டாவது போட்டியில் பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழக வி. பிரிவினரை எதிர்த்து மருதமுனை யுனைட்டெட் விளையாட்டுக் கழக வி பிரிவினர் மோதினர். இதில் 1-0 என்ற கோல் அடிப்படையில் மருதமுனை யுனைட்டெட் விளையாட்டுக்கழக வி பிரிவினர் வெற்றி பெற்றனர்.
மூன்றாவது போட்டியில் பிளைங் ஹோர்ஸ் ஏ. அணியினரை எதிர்த்து வாழைச் சேனை அல்- அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் ஏ பிரிவு அணி மோதியது. இதில் 3-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வாழைச் சேனை அல்- அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் ஏ பிரிவு அணி வெற்றி பெற்றது.
இப்போட்டி நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களும், கௌரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும், சட்டத்தரணியுமான ஏ.எம். றகீப், அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் எம்.ஐ.எம். மனாப், அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் உதவிச் செயலாளர் ஏ.எம். இப்றாஹீம் ஆகியோரும், சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் பிரதித் தலைவரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.ஏ. பஷீர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மர்ஹூம் எம்.ஐ. முஹம்மது பௌஸி சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தில் பொதுச் செயலாளர், உதவிச் செயலாளர், பயிற்றுனர், பொருளாளராகவும் பல்வேறு பதவிகளில் இருந்து கழகத்தை சிறப்பாக வழி நடாத்தியவராகும். இவர் மரணித்ததன் 3 ஆவது ஆண்டினை நினைவு கூரும் முகமாவே இப்போட்டி இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment