ஏ.ஜி.ஏ.கபூர், அக்கரைப்பற்று-
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால்; நடாத்தப்பட்ட 2013 ஆம் ஆண்டில் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களால் தங்களது கன்னி முயற்சியாக நூலாக்கம் செய்யப்பட்ட தேன் துளிகள், மண்ணில் புதைந்த வரலாறு, தண்ணீருக்கு வந்த தாகம் ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மஹா வித்தியாலயத்தில் மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்; ஏ.எல்.தௌபீக் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாரை மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், அவர்கள் கலந்து கொண்டதோடு, அதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் டபிள்யூ.ஏ.எல்.விக்கிரம ஆராய்ச்சி, முன்னாள் பிரதிப் பணிப்பாளர் டீ.டபிள்யூ.யூ.வெலிக்கல பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல்,பிரதிக் கல்லிப் பணிப்பாளர் ஏ.எஸ்.அஹமட் கியாஸ்மற்றும் அதிதகளாக கலாபூஷங்களான அன்புடீன், பாலமுனை பாறூக், ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் எம்.ஐ.ரவூப்,ஓய்வு பெற்ற பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ.நஜுமுதீன் (அக்கரைப்பற்று நஜிமு), கவிஞரும், ஆசிரியையுமான ஜெகதீஸ்வரி நாதன்(தம்பிலுவில் ஜெகா).மற்றும் கலாசார உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலாபூஷணம் முல்லை வீரக்குட்டி (மண்ணில் புதைந்த வரலாறு) , எழுகவி எம்.ஐ.எம்.ஜெலீல் (தண்ணீருக்கு வந்த தாகம்) , மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பாளர்; தேசகீர்த்தி ஏ.எல்.தௌபீக் (தேன் துளிகள்); ஆகியோர் தங்களின் நூல்களின் முதற் பிரதியை மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் அவர்களுக்கு வழங்கி நூல்களை வெளியிட்டு வைத்தனர்.;.
இந் நிகழ்வில் கலை, இலக்கிய வாதிகள், ஆசிரியர்கள்.மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment