அளுத்கம நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையத்தில் தீ பரவி முற்றாக எரிந்துள்ளது - படங்கள்



தர்ஹா நகர் நிருபர்-
ளுத்துறை மாவட்ட அளுத்கம நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது இன்று அதிகாலை 3 மணியிளவில் தீ பரவி இருமாடியைக் கொண்ட குறித்த வர்த்தக நிலையம் முற்றாக எரிந்துள்ளது.

அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் குறித்த வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட இத்தீயை கட்டுப்படுத்த அளுதடகம பொலிசார் மற்றும் தீயணைப்பு படையினரும் முயற்சிகளை மேற்கொண்டதனால் தீ பரவுதல் கட்டுப்பாட்டிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது விடயமாக மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த வர்த்தக நிறுவனம் அளுத்கம பஸ்தரிப்பிடத்திற்கும், பொலிஸ் நிலையத்திற்கும் அன்மையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் சகோதரருக்கு எதிராக முறைப்பாடு ஒன்று அளுத்கம பொலிஸ் நிலையத்தில் பதியப்பட்டு, குறித்த நபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு அங்கு பகிரங்க மன்னிப்பு கோரிய நிலையில் குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக அளுத்கம நகரில் பௌத்த தேரர்களால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்தே இந்த வர்த்தக நிலையம் தீப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :