தாய்லாந்தின் சம்மாசட் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்று வரும் மெய்வல்லுநர் சம்பியன்சிப் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட ஆர்.எம்.ரஜாஸ்கான் 200 மீற்றர் ஓட்டத்தில் முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கத்தினைப் பெற்றுள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ரஜாஸ்கான் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கை இராணுவ அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய அணியில் இடம்பெற்றுள்ள ரஜாஸ்கான் அம்பாரை மாவட்டத்திற்கு தொடர்ச்சியாக பெருமை சேர்த்து வருகின்றார்.
அந்த வகையில் கிழக்கின் தங்கமகன் எனும் சிறப்புப் பட்டத்தை அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகம் ரஜாஸ்கானுக்கு சூட்டி மகிழ்கின்றது. ரஜாஸ்கானின் திறமையினால் ஒலுவில் ஊரும், அட்டாளைச்சேனைப் பிரதேசமும் மனமகிழ்கின்றது.
சர்வதேச வீரனுக்கு இனியாவது கிழக்கில் விழா எடுத்து நமது மண்ணுக்கான பெருமையை வெளிக்காட்டுவோம். பிரதேச வாதங்களைக் களைந்து கிழக்கின் தங்கமகனுக்கு வாழ்த்துக்கூறுவோம்.

0 comments :
Post a Comment