இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மதங்களையும் ஒன்றினைந்து ஒற்றுமையையும் இன ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் புத்தாண்டு விழா அட்டாளைச்சேனை அல் முனிறா பாடசாலையில் அதிபர் எம்.ஐ.எம். அப்துல் ஸலாம் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் மாணவர்களாகிய சின்னஞ்சிறியவர்கள் மதங்களையும், மதங்களுக்கிடையில் ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் வெளிப்படுத்தம் நோக்கத்தில் நடை பெற்றது. எமது நாடு ஒரு பல்லின மக்களைக்கொண்ட ஒரு நாடாகும்.
இங்கு இருக்கின்ற ஒவ்வொரு சமய கலாசாரத்தையும் மற்றவர் புரிந்து கொள்கின்ற போது சமாதானம் தானாகவே ஏற்படுத்தப்படும் என்பதன் இதன் நோக்கமாகும்.
இந் நிகழ்வில் சகல ஆசிரியர்களும், மாணவர்களுடைய பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
.jpg)

.jpg)
0 comments :
Post a Comment