ஐ.பி.எல். போட்டியில் கடந்த 6ம் திகதி மும்பையில் நடந்த ஆட்டத்தில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – மும்பை இந்தியன் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி வேகப்பந்து வீரர் ஸ்டார்க், மும்பை அணியின் துடுப்பாட்டக்காரர் போலார்ட், ஆடுகளத்தில் மோதிக் கொண்டது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
போல்லார்ட்டை நோக்கி ஆத்திரத்தில் ஸ்டார்க் பந்தை எறியும் விதமாக வீசினார். பதிலுக்கு போலார்ட் பேட்டை வேகமாக வீசினார். நல்ல வேளையாக பேட் தரையில் விழுந்தது.
ஸ்டார்க் – போல்லார்ட் மோதலின் போது பெங்களூர் அணியில் விளையாடும் மேற்கிந்திய அணியின் கிறிஸ் கெய்ல் தனது நாட்டை சேர்ந்த போல்லார்டை சமாதானம் செய்தார்.
இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், ஆட்டத்தில் ஏற்பட்ட தீவிரம் காரணமாக இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்கின்றன. மோதலின் போது நான் பொல்லார்ட் அருகே வந்து ‘உனது தலையில் குத்துவேன்’ என்று கூறினேன். பிறகு அவர் அமைதியானர்.
பெங்களூர் அணி தற்போது பின் தங்கிய நிலையில்தான் இருக்கிறது. ஆனால், வாய்ப்பை இழந்து விடவில்லை. இனிவரும் ஆட்டங்களில் நன்றாக விளையாடுவோம்.
டிவில்லியர்சின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. நாங்கள் சிறப்பான ஆட்டத்தின் மூலம் முன்னேறுவோம் என்று கூறியுள்ளார்.

0 comments :
Post a Comment